தேயிலை மேம்படுத்தல் பிரிவு

இலங்கை தேயிலை சபையின் மேம்படுத்தல் பிரிவு, உலகம் முழுவதும் சிலோன் தேயிலையின் (Ceylon Tea) வகிபாகத்தை வரைவிலக்கணம் செய்தல், ஊக்குவித்தல் மற்றும் பாதுகாத்தலுக்கான பொறுப்பைக் கொண்டுள்ளது.

மேம்படுத்தல் பிரிவானது, இலங்கை தேயிலை ஏற்றுமதியாளர்கள் மற்றும் வர்த்தகக் குறியீடு உரிமையாளர்களின் முயற்சிகளுக்கு உதவுவதுடன், தேயிலை உற்பத்திகளை உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியில் சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது.

இந்த பிரிவு 1932 இல் செயற்பட ஆரம்பித்த ஒரு கைத்தொழில் சங்கமான தேயிலை பிரச்சார சபையின் நேரடி பதிலாள் ஆகும். இந்த நிறுவனம் தற்போது தேயிலை சபையுடன் இணைக்கப்பட்டுள்ளதுடன், இரண்டாவது 1976 இல் நிறுவப்பட்டதுடன், ஏறக்குறைய எண்பது ஆண்டுகால வெற்றிகரமான செயற்பாட்டின் மூலம் பெற்ற அனுபவத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இலங்கை தேயிலை பிரச்சார சபையே, சிலோன் தேயிலையின் (Ceylon Tea) வர்த்தகக் குறியீட்டை முதலில் வடிவமைத்து உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றதுடன் நுகர்வோர் மனதில் நன்கு அறியப்பட்ட சிங்க சின்னத்தையும் (Lion Logo) நிறுவியது. இன்றும் இச் சிங்க சின்னமானது (Lion Logo) உயர்தர தூய சிலோன் தேயிலைக்கு அடையாளமாக உள்ளது.

செயற்பாடுகள்

  • வெளிநாடுகளில் சிலோன் தேயிலை (Ceylon Tea) வர்த்தகக் குறியீடு  சார்பாக விளம்பரம், ஊக்குவிப்பு மற்றும் மக்கள் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு வகையான செயற்பாடுகளை மேம்படுத்தல் பிரிவு மேற்கொள்கிறது.
  • இலங்கை தேயிலை ஏற்றுமதியாளர்கள் மற்றும் வர்த்தகக் குறியீடு உரிமையாளர்கள் மற்றும் இலங்கையர் அல்லாத இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் கலவையற்ற, தூய சிலோன் தேயிலையை  (Pure Ceylon Tea) சந்தைப்படுத்தும் வர்த்தகக் குறியீடு உரிமையாளர்களுக்கு, சர்வதேச சந்தைகளில் விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்தல் முயற்சிகளுக்கு இப்பிரிவு ஆதரவளிக்கிறது.
  • சர்வதேச வர்த்தக கண்காட்சிகள் மற்றும் பிற முக்கிய தொழில் நிகழ்வுகள் மற்றும் மன்றங்களில் மேம்படுத்தல் பிரிவு இலங்கையை மற்றும் சிலோன் தேயிலையை (Ceylon Tea) பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
  • கண்டியில் உள்ள சிலோன் தேயிலை அருங்காட்சியகத்தை நிருவகித்தல், அத்துடன் கொழும்பில் உள்ள அதன் விற்பனை நிலையத்தில் சிலோன் தேயிலையின் மற்றும் பிற முன்னணி வர்த்தகப் பெயர்களின் சில்லறை விற்பனையை நிர்வகித்தல், ஆகியவை இப் பிரிவின் ஏனைய இரண்டு பிரதான செயற்பாடுகளாகும்.

சர்வதேச வலையமைப்பு

இப்பிரிவின் பெரும்பாலான செயற்பாடுகள் வெளிநாடுகளில் உள்ள இலங்கை இராஜதந்திர பணிகளுடன் சம்பந்தப்பட்ட விளம்பர அலுவலக வலையமைப்பின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. பிரதான அலுவலகங்களாக துபாய், மொஸ்கோவ் மற்றும் பீஜிங் ஆகியவை உள்ளதுடன், உலகெங்கிலும் உள்ள பிற அலுவலகங்கள் அவற்றின் வணிக முகவர்கள் மற்றும் விளம்பர நடவடிக்கைகள் மூலம் ஆதரவை வழங்குகின்றன.

This site is registered on wpml.org as a development site. Switch to a production site key to remove this banner.