சிலோன் தேயிலையின் (Ceylon Tea) தர உத்தரவாதம் தொடர்பாக இலங்கை தேயிலை கைத்தொழிற்துறையின் சோதனை மற்றும் சான்றிதழ் தேவைகளை எளிதாக்குவதற்காக இலங்கை தேயிலை சபையின் பகுப்பாய்வு ஆய்வுக்கூடம் 1986 இல் நிறுவப்பட்டது.
பகுப்பாய்வு ஆய்வுக்கூடம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ISO சர்வதேச தரநியமங்கள் அல்லது முன்னரே தீர்மானிக்கப்பட்ட தகவுதிறன்கள் பற்றிய சோதனை அறிக்கைகள் தேவைப்படும் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய சரிபார்க்கப்பட்ட முறைகளின்படி சோதனைகளை மேற்கொள்கிறது.
பகுப்பாய்வு ஆய்வுக்கூடத்தின் அனைத்து நடவடிக்கைகளும் ISO/IEC 17025:2017 தரநியமம் மற்றும் இலங்கை அங்கீகார சபையின் தேவைகளுக்கு இணங்க செயற்படுத்தப்படுகின்றன.
இரசாயன பகுப்பாய்வு பிரிவு, நுண்ணுயிரியல் பகுப்பாய்வு பிரிவு மற்றும் பூச்சிக்கொல்லி எச்சங்கள் பகுப்பாய்வு பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கிய இலங்கை தேயிலை சபை பகுப்பாய்வு ஆய்வகத்தின் மூன்று செயற்பாட்டு பிரிவுகளுக்கான அங்கீகாரம், 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சர்வதேச ஆய்வக அங்கீகாரக் குழுவினால் (ILAC) அங்கீகரிக்கப்பட்ட தேசிய அமைப்பான இலங்கை இணக்க மதிப்பீட்டிற்கான அங்கீகார சபையினால் (SLAB) வழங்கப்பட்டது மற்றும் வழக்கமான வருடாந்த கண்காணிப்பு தணிக்கைகளுக்கு இணங்க இதன் சேவைகள் பேணிவரப்படுகின்றன.
பகுப்பாய்வு ஆய்வகத்தில் உள்ள தகுதிவாய்ந்த மற்றும் திறமையான தொழில்நுட்ப பணியாளர்கள் கறுப்பு தேயிலைக்கு ISO 3720:2011 மற்றும் பச்சை தேயிலைக்கான ISO 11287:2011 இல் பரிந்துரைக்கப்பட்ட ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச தர முறைகளின்படி சோதனைகளை மேற்கொள்கின்றனர்.
சிலோன் தேயிலையின் (Ceylon Tea) இறுதி உற்பத்தியின் தரத்தின் மிக உயர்ந்த தரத்தை அடைவதற்கும், பேணிவருவதற்கு ஆலோசனை வழங்குவதற்கும், கண்காணிப்பதற்கும், ஆய்வு செய்வதற்கும், வழிகாட்டுவதற்கும் நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம். பகுப்பாய்வு ஆய்வகத்தின் அனைத்து நடவடிக்கைகளும் ISO/IEC 17025:2017 தரநியமம் மற்றும் இலங்கை அங்கீகாரச் சபையின் தேவைகளுக்கு இணங்க செயற்படுத்தப்படுகின்றன.
பகுப்பாய்வு ஆய்வகம் அதன் செயற்பாடுகளை உலகத்தரம் வாய்ந்த ஆய்வக வசதிகளுடன் கூடிய அதிநவீன பரிசோதனை ஆய்வுகூட பிரிவானது, 574/1, காலி வீதி, கொழும்பு 03, இலங்கை எனும் இடத்தில் அமைந்துள்ளது, இங்கு அவற்றின் செயற்பாடு மற்றும்/அல்லது செயற்பாடுகளுக்கு குறிப்பிட்ட ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி மாடிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.



