இலங்கை தேயிலை சபையின் ஏற்றுமதிப் பிரிவு, 1959 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க தேயிலை (வரி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடு) சட்டத்தின் மூலம் மற்றும் 1975 இன் 14ம் இலக்க இலங்கை தேயிலை சபை சட்டத்தின் கீழ் இலங்கை தேயிலை சபைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துடன் இலங்கை தேயிலை சபையின் ஏற்றுமதிப் பிரிவு முக்கியதொரு செயற்பணியை ஆற்றிவருகின்றது.
தேயிலை ஏற்றுமதியாளர்களை பதிவு செய்தல், தேயிலை பொதி செய்பவர்கள், களஞ்சியங்கள், இறக்குமதியாளர்கள், தேயிலை பொதி வகைகள், தேயிலை பெற்றுக் கொள்ளல், தேயிலைக்கான குறைந்தபட்ச தரநியமங்களை அவதானிப்புச் செய்தல், தேயிலை ஏற்றுமதிக்கு அங்கீகாரம் வழங்குதல், தேயிலை ஏற்றுமதி குறித்த புள்ளிவிவரங்களைத் தொகுத்தல் மற்றும் இலங்கையின் இருதரப்பு சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களின் (FTAs) கீழ் தேயிலை ஏற்றுமதியினை கண்காணிப்பு ஆகியவை இதன் சில செயற்பாடுகள் ஆகும்.
இனி நாம், இச் செயற்பாடுகளில் சிலவற்றை விரிவாகப் பார்ப்போம்.
ஈரான் நாட்டு ஏற்றுமதிக்கான G.M.P சான்றிதழ்
ஈரான் இலங்கையின் முக்கிய தேயிலை ஏற்றுமதி சந்தைகளில் ஒன்றாகும் என்பதுடன், இலங்கை தேயிலை சபை 2016 ஆம் ஆண்டு ஈரானுக்கு ஏற்றுமதி செய்வதற்காக தயாரிக்கப்பட்ட தேயிலை இருப்புக்களின் தரத்தை மதிப்பீடு செய்வதற்காக இந்த சான்றிதழை வழங்கத் தொடங்கியது.
சரியான கலவை முறை, பொதிசெய்தல் முறை மற்றும் களஞ்சியத்தில் மேற்கொள்ளும் களஞ்சியப்படுத்தல் நடைமுறைகள் மற்றும் தேயிலையின் இறுதி தயாரிப்பின் தரம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்த பின்னரே இந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இலங்கை சுங்க ஏற்றுமதி வசதிகள் மையத்தினால் (EFC) தேயிலை இருப்புக்கள் பற்றி 24/7 நடவடிக்கைகள் மற்றும் இணைந்த விசாரணை
தேயிலை ஏற்றுமதியாளர்களால் CUSDES களை சமர்ப்பிப்பதற்கு வசதி செய்வதற்கும் அவர்களின் கேள்விகளுக்கு விரைவான பதிலை வழங்குவதற்கும் வசதியாக 24/7 செயற்பாட்டை படிப்படியாக அமைக்க இலங்கை தேயிலை சபை நடவடிக்கை எடுத்துள்ளது. ஆரம்ப கட்டமாக, வார நாட்களில் இரவு 10.00 மணி வரை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு செயற்படும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சுங்கத்துடன் இணைந்து இலக்கம் 478/3C, கே சிரில் சி பெரேரா மாவத்தை, கொழும்பு 13 இல் அமைந்துள்ள EFC இல் விசேட விசாரணை மற்றும் வர்த்தக வசதிகள் பிரிவு நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்துள்ளது. இந்த பிரிவின் முக்கிய நோக்கம், சுங்க எல்லை நடைமுறைகளுக்கு இடையூறு ஏற்படாதவாறு ஏற்றுமதிக்கு தயார்படுத்தப்படும் தேயிலை இருப்புகள் மற்றும் தேயிலையின் தரத்தை உறுதி செய்வதற்காக கூட்டு ஆய்வுகளை மேற்கொள்ளல் மற்றும் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் ஏற்றுமதி பொருட்களுக்கு அனுமதி வழங்குவதாகும்.
பதிவுகள்
தேயிலை ஏற்றுமதி பிரிவின் முக்கிய கடமைகளில் ஒன்றாக இருப்பது, ஏற்றுமதியாளர்கள், தேயிலை பொதி செய்பவர்கள், களஞ்சியங்கள் மற்றும் இறக்குமதியாளர்களை பதிவு செய்வதும் அதனை புதுப்பித்தலுமாகும். செல்லுபடியாகும் வியாபாரப் பதிவைக் கொண்டுள்ள, பதிவுசெய்யப்பட்ட களஞ்சியசாலை (தேயிலை களஞ்சியப்படுத்தல், கலவை செய்தல் மற்றும் பொதி செய்வதற்கு), தேநீர் சுவைக்கும் வசதியுடன் கூடிய தகுதிவாய்ந்த தேநீர் சுவையாளர் மற்றும் குறைந்தபட்சம் ரூ. 1.0 மில்லியன் முதலீடு செய்துள்ள அல்லது செலுத்தியுள்ள தேயிலை ஏற்றுமதியாளர் ஒருவர், பதிவு செய்வதற்கு விண்ணப்பிக்க தகுதியு பெறுவார்.
1986 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் திகதிய 386/13 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இலங்கை தேயிலை சபை ஒழுங்குவிதிகளுக்கு (தேயிலை பொதி செய்பவர்களை பதிவு செய்தல்) அமைய, உள்நாட்டு நுகர்வுக்காக அல்லது வேறு வகையில் தேயிலை பொதி செய்யும் தொழிலில் ஈடுபடும் எந்தவொரு நபரும் இலங்கை தேயிலை சபையில் பதிவு செய்வது அத்தியாவசியமான தேவைப்பாடாகும். இவ்வாறு பதிவு செய்தல் ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும் மற்றும் ஆண்டுதோறும் இது புதுப்பிக்கப்பட வேண்டும்.
1959ம் ஆண்டு 16ம் இலக்க, தேயிலை (வரி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் தேயிலை ஏற்றுமதியாளராக பதிவுசெய்யப்பட்ட எந்தவொரு நிறுவனமும் தேயிலை இறக்குமதியாளராக பதிவு செய்ய தகுதி பெறும்.
1984, 1986 ஆண்டு செப்டெம்பர் 10ம் திகதிய 410/11 ஆம் இலக்க மற்றும் 2003ஆண்டு மார்ச் 20ம் திகதிய 1280/8 ஆம் இலக்க இலங்கை தேயிலை சபையின் ஒழுங்குவிதிகளின் அடிப்படையில் (தேயிலை களஞ்சிய சாலை) 000 கிலோகிராம் தேயிலைக்கு அதிகமான தேயிலையை எந்த நேரத்திலும் களஞ்சியப்படுத்தி வைப்பதற்குப் பயன்படுத்தப்படும் களஞ்சிய சாலை, மற்றும் தேயிலை களஞ்சியப்படுத்துவதன் நோக்கத்திற்காக திருப்திகரமாக இருப்பதாக இலங்கை தேயிலை சபை கருதினால், இலங்கை தேயிலை சபையில் குறிப்பிடப்பட்ட விதிமுறைகளின் ஏற்பாடுகளுக்கு அமைய இலங்கை தேயிலை சபையில் பதிவு செய்யப்பட வேண்டும்.
1981 ஆம் ஆண்டின் இலங்கை தேயிலை சபையின் ஒழுங்குவிதிகளின் கீழ் (இறக்குமதி மற்றும் ஏற்றுமதி) இலங்கை தேயிலைகளுடன் கலந்த வம்சாவளியைக் கொண்ட தேயிலை உள்ளடங்கும் சில்லறை கொள்கலன்கள் ஏற்றுமதி செய்யப்படலாம். அத்தகைய கொள்கலன்கள்/பொதிகள் “இலங்கையில் பொதி செய்யப்பட்ட சிலோன் மற்றும் பிற வம்சாவளியைக் கொண்ட தேயிலைகளின் கலவை” அல்லது “இலங்கையில் பொதி செய்யப்பட்ட பிற வம்சாவளியைக் கொண்ட தேயிலைகள்” என்ற விளக்கத்தை மட்டுமே கொண்டிருக்க வேண்டும், மற்றும் அனைத்து கொள்கலன்களும் இலங்கை தேயிலை சபையில் பதிவு செய்யப்பட வேண்டும்.
அனைத்து பதிவு செய்யப்பட்ட தேயிலை ஏற்றுமதியாளர்களும், ஏற்றுமதிக்கான அங்கீகாரத்தைப் பெறுவதற்கு, ASYCUDA அமைப்பின் முறைமை மூலம் தேயிலை ஏற்றுமதி பிரிவில் CUSDES ஆவணங்களுடன் மற்ற தேவையான ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். இ.தே.ச. அதிகாரிகள் குழு, ஏற்றுமதிக்குத் தயாராக உள்ள தேயிலை இருப்புக்களை பரிசோதித்து, குறித்த தேயிலை ஏற்றுமதிக்குத் தேவையான தரங்களுக்கு இணங்குகிறதா என்பதைக் கண்டறிவார்கள்.
குறைந்தபட்ச ISO 3720 தர நியமத்தை பேணிவருதல்
இலங்கை தேயிலை சபையினால் நியமிக்கப்பட்ட தேயிலை சுவை பரிசோதகர்களை உள்ளடக்கிய நிபுணர் குழு, தேயிலை மாதிரிகள் மற்றும் தேயிலை தொழிற்சாலைகளில் இருந்து பெறப்பட்ட அனைத்து தேயிலை மாதிரிகள், இறக்குமதியின் பின்னர் இறக்கப்பட்ட கீழே இறக்கப்படாத இருப்புகள், மற்றும் ஏற்றுமதிக்காக தயார் செய்யப்பட்டுள்ள இருப்புகள், அனுமதிக்கப்பட்ட வகைகளின் கீழ் ISO 3720 தரநியமங்களுக்கு இணங்குகிறதா மற்றும் எந்த மாசுபாடும் இல்லாமல் இருக்கிறதா என்பதைக் கண்டறிந்து, அதன் மூலம் ஏற்றுமதிக்கு ஏற்ற தேயிலையை மட்டுமே அனுமதிப்பார்கள்.
தேயிலை இறக்குமதி
இலங்கை தேயிலை சபை 4,576,048.32 கிலோகிராம் தேயிலையை இறக்குமதி செய்வதற்கு 510 இறக்குமதி அனுமதி பத்திரங்களை வழங்கியுள்ளது. எவ்வாறாயினும், மீளாய்வு செய்யப்பட்ட காலப்பகுதியில் இறக்குமதி செய்யப்பட்ட தேயிலையின் உண்மையான அளவு 4,660,293 கிலோவாகும்.
மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற தேயிலையை நிராகரித்தல்
ஏற்றுமதிப் பிரிவின் மேற்பார்வையின் கீழ், கப்பலேற்ற முன்னரான கட்டத்தில் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்றதாகக் கண்டறியப்பட்ட தேயிலை அகற்றப்படுகிறது.
தேயிலையை மீளப்பெற்றுக் கொள்ளல்
ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலை வெளிநாட்டு கொள்வனவாளரால் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால், உள்ளூர் ஏற்றுமதியாளர் இலங்கை தேயிலை சபையின் அனுமதியுடன் அதனை மீளப் பெற்றுக் கொள்ளல் வேண்டும். ஏற்றுமதி/மறு பயன்பாட்டிற்கான அங்கீகாரத்தை வழங்குவதற்கு முன்னர், SLTB இனால் இருப்புகள் மீண்டும் பரிசோதிக்கப்படுகின்றன.



