தேயிலை ஆணையாளரின் பிரிவு

இலங்கை தேயிலை சபையின் தேயிலை ஆணையாளரின் பிரிவு, தேயிலையின் பயிர்ச்செய்கை, உற்பத்தி மற்றும் தர மேம்பாடு தொடர்பான முக்கிய செயற்பாடுகளை ஒழுங்குறூடர்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

தேயிலை ஆணையாளரின் பிரிவு ஏழு பிராந்திய அலுவலகங்களைக் கொண்ட வலையமைப்பின் ஊடாகச் செயற்பட்டு வருவதுடன், சபையின் கடுமையான தரக்கட்டுப்பாட்டுக்களுக்கு இசைவான வர்த்தகக் குறியீடுகளுக்கு மாத்திரம் சிங்க சின்னத்தை (Lion Logo) உறுதி செய்து இலங்கை தேயிலை வர்த்தகக் குறியீட்டை பதிவு செய்தல் மற்றும் சான்றுப்படுத்துவதையும் மேற்கொள்கின்றது.

தேயிலை உற்பத்தியாளர்கள், தொழிற்சாலைகள், பச்சை தேயிலை கொழுந்து விற்பனையாளர்கள்/ கொள்வனவாளர்கள், தேயிலை தயாரித்தல் நிலையங்கள் மற்றும் விநியோகஸ்தர்களை பதிவுசெய்தல் மற்றும் கண்காணிப்பது முதல் தொழிற்சாலை நவீனமயமாக்கல் மற்றும் மீள்விற்பனைக்கு மானியம் வழங்குவது மற்றும் உற்பத்தித்  தரத்தை சான்றுப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டங்களை நடத்துவது வரை,  தேயிலை கைத்தொழில்லின் நிலைபேறானதன்மை மற்றும் முன்னேற்றத்திற்காக தேயிலை ஆணையாளரின் பிரிவு மிக முக்கிய செயற்பணியை ஆற்றி வருகின்கிறது.

The core functions of the Tea Commissioner’s Division

தேயிலை உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிற்சாலைகளை பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல்

பச்சை தேயிலை கொழுந்துகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களை அமுல்படுத்துதல்

தொழிற்சாலைகளை நவீனமயப்படுத்தல் மற்றும் மீள் பயிர்செய்கை (புதிய பயிர்செய்கை/ இடைவெளிகளில் பயிரிடல்) ஆகியவற்றிற்கு மானியங்களை வழங்குதல்

தொழிற்சாலைகள் மற்றும் விற்பனையாளர்களுக்கு நியாயமான விலையை செலுத்தல்.

GMP இன் விசேட கண்காணிப்பு

பச்சை தேயிலை கொழுந்து விற்பனையாளர்களை பதிவு செய்தல் மற்றும் கண்காணித்தல்

கழிவுத் தேயிலை தயார்படுத்தும் நிலையங்கள் மற்றும் விற்பனை முகவர்களை பதிவு செய்தல் மற்றும் கண்காணித்தல்

SLTB/SLSI உற்பத்தி தரத்தை சான்றுப்படுது்தும் நிகழ்ச்சித்திட்டங்களை நடத்துதல்

தேயிலை மீள் பயிரிடல் / மீள்நிரப்பல் / புதிய பயிர்செய்கை

FMSS

தேயிலை காணிகளை பதிவு செய்தல்

மாதிரி தேயிலை தோட்டம்

1 மில்லியன் தேயிலை செடிகளை விநியோகித்தல்

கிளைபோசேட் (Glyphosate) விநியோகித்தல்

ஈரானுக்காண ஏற்றுமதியாளர்களுக்கு GMP சான்றிதழ்

ஒன்லையின் மூலமான நியாயமான விலை (SMS)

This site is registered on wpml.org as a development site. Switch to a production site key to remove this banner.