இலங்கை தேயிலை சபை (SLTB) 1976 ஜனவரி 1 இல் பாராளுமன்ற சட்டத்தின் மூலம் முழுமையாக அரசாங்கத்திற்கு சொந்தமான நியாயாதிக்க நிறுவனமாக நிறுவப்பட்டது.
1975 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க இலங்கை தேயிலை சபை சட்டத்தின் கீழ் தேயிலை கட்டுப்பாட்டு திணைக்களம், தேயிலை ஏற்றுமதி ஆணையாளர் திணைக்களம், இலங்கை தேயிலை பிரச்சார சபை மற்றும் இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறுவகம் ஆகியவற்றை ஒன்றிணைத்து இலங்கை தேயிலை சபை (SLTB) உருவாக்கப்பட்டது. (1985 இன் 17 ஆம் இலக்கம், 1990 இன் 14 ஆம் இலக்கம், 2003 இன் 29 ஆம் இலக்கம் மற்றும் 2006 இன் 44 ஆம் இலக்கம் ஆகிய சட்டங்களின் மூலம் திருத்தப்பட்டது) பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் கீழ் இந்த சபை உள்ளது. மேற்குறிப்பிட்ட சட்டத்தின் கீழ் இலங்கை தேயிலை சபையின் முதன்மையான நோக்கங்கள் இலங்கையில் தேயிலை கைத்தொழிலின் மேம்பாடு, சிலோன் (இலங்கை) தேயிலையை (Ceylon Tea) உலகளாவிய ரீதியில் ஊக்குவித்தல் மற்றும் கைத்தொழிலில் பின்பற்ற வேண்டிய ஒழுங்குமுறை தேவைகளை நடைமுறைப்படுத்துதல் ஆகும்.
உற்பத்தி, பயிரிடுதல் மற்றும் மீள் பயிரிடல், தேயிலை தொழிற்சாலைகளை தாபித்தல் மற்றும் செயற்படுத்துதல் மற்றும் கொழும்பு தேயிலை ஏலங்களை நடத்துதல் தொடர்பான ஒழுங்குமுறைகள் சபையின் சட்டத்தின் கீழ் உள்ள பொறுப்புகளாகும். 1957 ஆம் ஆண்டின் 51 ஆம் இலக்க, இலங்கை தேயிலை சபை சட்டம் மற்றும் தேயிலை கட்டுப்பாட்டு சட்டம் மற்றும் 1959 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க தேயிலை (வரி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடு) சட்டம் ஆகியவற்றின் கீழ் உருவாக்கப்பட்ட தேயிலை தரத்தை பேணுதல், பொதியிடல் வழிகாட்டுதல்களை வழங்குதல், களஞ்சிய தேவைகள் போன்றவையும் இதன் சட்டரீதியான பொறுப்புகளில் அடங்கும்.
1994 இல் தேயிலை ஆராய்ச்சி நிறுவகம் இலங்கை தேயிலை சபையிலிருந்து சட்டப்பூர்வமாக பிரிக்கப்பட்டது, அதன் யாப்பு மற்றும் செயற்பாடுகள் தேயிலை ஆராய்ச்சி சபையினால் நிர்வகிக்கப்பட்டு, பின்னர் புதிதாக 1993 இன் 52 ஆம் இலக்க தேயிலை ஆராய்ச்சி சபை சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது.
தேயிலை சபை சட்டங்கள்
- தேயிலை கட்டுப்பாட்டு சட்டம் 51/1957
- தேயிலை – ஏற்றுமதி வரி கட்டுப்பாடு – 1959 ஆம் ஆண்டின் 16 ஆம் எண் சட்டம்
- இலங்கை தேயிலை வாரிய சட்டம் 14, 1975
- இலங்கை தேயிலை வாரியம் (தேயிலை (ஏலத்தை நடத்துதல் மற்றும் ஒழுங்குபடுத்துதல்) ஒழுங்குமுறை 09 ஜூன் 1978
- உற்பத்தி தரகர்களுக்கு உரிமம் வழங்குதல் – 1979 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க சட்டம்
- உற்பத்தி தரகர்கள் (தேயிலை) உரிமம் வழங்குதல் ஒழுங்குமுறை 27 ஆகஸ்ட் 1979 மற்றும் அதன் திருத்தங்கள்
- இலங்கை தேயிலை வாரிய இறக்குமதி மற்றும் ஏற்றுமதி ஒழுங்குமுறை 01 ஏப்ரல் 1981 மற்றும் திருத்தங்கள்
- 1983 ஆம் ஆண்டின் தேயிலை கட்டுப்பாட்டு திருத்தம் 3
- SLTB – தேயிலை கிடங்கு – ஒழுங்குமுறை 05 டிசம்பர் 1984 2003
- இலங்கை தேயிலை வாரிய சட்டம் 17, 1985
- தேயிலை – 1985 ஆம் ஆண்டின் 51 ஆம் இலக்க ஏற்றுமதி வரி மற்றும் கட்டுப்பாடு (திருத்தம்) சட்டம்
- இலங்கை தேயிலை வாரிய திருத்தம் 1990 இன் 44
- 1993 ஆம் ஆண்டின் தேயிலை கட்டுப்பாட்டு திருத்தம் 3
- இலங்கை தேயிலை வாரிய திருத்தம் 29/2003
- இலங்கை தேயிலை வாரிய சட்டம் 44 / 2006
- இலங்கை தேயிலை வாரியம் (தேயிலை தொழிற்சாலைகள் கட்டுமானம் மற்றும் செயல்பாடு) குறைந்தபட்ச தரநிலை ஒழுங்குமுறை எண் 1, 10 ஜனவரி 2008
- இலங்கை தேயிலை வாரிய திருத்தம் 2018 இன் 13
- தேயிலை கட்டுப்பாடு (தோட்டங்கள் மற்றும் சிறுதொழில்கள் மேம்பாடு மற்றும் பராமரிப்பு) ஒழுங்குமுறை எண். 01, 14 டிசம்பர் 2021



