நாட்டின் தெற்கே பழைய சிங்களப் பெயரைத் தாங்குகின்ற, ருஹுண தேயிலை வளரும் மாவட்டம், தற்போது இலங்கையின் தென் மாகாணத்தில் அமைந்துள்ளது. தேயிலை வளரும் நிலப்பரப்பு, உட்புறத்தை நோக்கி தாழ்வான மலைகள் கொண்ட கடலோர சமவெளி, பெரும்பாலும் மாகாணத்தின் மேற்குப் பகுதியில், தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழையால் செழிப்புறும் ‘ஈரவலயத்தில்’ அமைந்துள்ளது. கிழக்கு நோக்கி, நிலம் முக்கியமாக புதர்க்காடுகளாக உள்ளன. சில பகுதிகள் புற்தரை சமவெளி மற்றும் கடலோர உப்பு கலந்த சதுப்பு நிலங்கள், வனப்பகுதியாக வளரும் பிரதேசமும் கிழக்கு நோக்கி பயணிக்கும் போது செழிப்பற்ற நிலப்பகுதியையும் கொண்டதாகும். இந்த கிழக்குப் பகுதியானது ருஹுனா தேசிய பூங்கா உட்பட பல இயற்கை வனங்களுக்கு தாயகமாக உள்ளது. இது இலங்கையர்களால் யால என்றழைக்கபடுகிறது, அதன் மேல் பகுதிகள் அண்மித்த மாகாணமான ஊவா வரை நீண்டு செல்கின்றது.
ருஹுண காடுகளில் காட்டு யானைகள், சிறுத்தைகள், கரடிகள், காட்டுப் பன்றிகள் மற்றும் பல வகையான மான் இனங்கள் உள்ளன. நூற்றுக்கணக்கான பூர்வீக மற்றும் புலம்பெயர்ந்த உயிரினங்களை கொண்ட பறவை ஆர்வலர்களுக்கு இது ஒரு சொர்க்கபுரியாகும், இதில் ராட்சத ஃபிளமிங்கோக்கள் தங்கள் இனப்பெருக்க காலத்தை மற்றொரு கடலோர வனப்பகுதியான புந்தலாவின் உப்பளங்களில் மற்றும் சதுப்பு நிலங்களில் கழிக்கின்றன.
ருஹுண தேயிலை சுவையாளர்களின் குறிப்புகள்
ருஹுண – “உண்மையாகவே தனித்துவமானது” “Distinctively unique”
600 மீற்றர் (2000 அடி) உயரத்தில் பயிரிடப்படுவதால், கடலோர சமவெளிகள் முதல் சிங்கராஜா மழைக்காட்டின் தெற்கு விளிம்பு வரையில் பரந்துள்ள துணைப் பகுதிகளை உள்ளடக்கிய ருஹுண மாவட்டத்தின் தேயிலைகள் “குறைந்த வளர்ச்சி” /“low-grown” தேயிலை என்று அழைக்கப்படுகின்றன. மண், தோட்டங்களின் குறைந்த உயரத்துடன் இணைந்து, தேயிலை செடிகள் வேகமாக வளர்ந்து, நீண்ட, அழகான இலைகளை உருவாக்குகிறன. முழுச் சுவையுடைய கறுப்புத் தேயிலை ஒரு தனித்தன்மை வாய்ந்த ருஹுணவின் சிறப்பாகும். ருஹுண தொழிற்சாலைகள் விலைமதிப்பற்ற “டிப்ஸ்” / “tips”. உட்பட பல்வேறு வகையான இலை வடிவங்கள் மற்றும் அளவுகளை உற்பத்தி செய்கின்றன.
ருஹுண வரலாறு மற்றும் தேயிலை
ருஹுண வரலாறு மற்றும் புராதனக் கதைகள் நிறைந்த பிரதேசம் ஆகும். பழங்கால வரலாற்றின் விடுதலை வீரரான துடுகெமுனு மன்னர் தனது இளமையை இங்கு கழித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இப்பகுதி கொடுங்கோல் மன்னர்கள் மற்றும் வெளிநாட்டு படையெடுப்பாளர்களுக்கு எதிராக செயற்படும் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. ஒரு காலத்தில் இப்போது இருப்பதை விட மிகவும் அடர்த்தியான சனத்தொகையைக் கொண்டிருந்த ருஹுண, ஐந்நூறு முதல் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் வரையிலான பண்டைய சிங்கள நாகரிகத்தின் நினைவுச்சின்னங்களை கொண்டுள்ளது. மேலும் இப்போது மக்கள் இல்லாத காடுகளில் பல நூற்றாண்டுகள் பழமையான நீர்ப்பாசன திட்டங்களின் எச்சங்கள் உள்ளன.
தென்மேற்குக் கடற்கரையைத் தவிர, பல நூற்றாண்டுகளாகப் போர்கள் மற்றும் தொற்றுநோய்களால் உள்நாட்டில் மக்கள் தொகை குறைந்துவிட்டதைத் தவிர, அரிதாகவே மக்கள் வசிக்கும் பகுதியாக ஆரம்பகால ஐரோப்பிய ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். நிலத்தின் பெரும்பகுதி மீண்டும் வனாந்தரமாகிவிட்டது. காலனித்துவ ஆட்சிக் காலத்தில் சிறிதளவும் மாற்றமடையவில்லை. சுதந்திரத்திற்குப் பின்னரும் கூட ருஹுண குறைந்த சனத்தொகை மற்றும் பின்தங்கிய நிலையில் இருந்ததுடன் கொழும்பு மற்றும் மேல் மாகாணத்திற்கு பொருளாதார ரீதியாக புலம்பெயர்ந்தவர்களின் பூர்வீகமாக இருந்தது. எவ்வாறாயினும், அண்மித்த காலத்தில், பிராந்தியத்தில், குறிப்பாக கரையோர நகரமான ஹம்பாந்தோட்டை மற்றும் பண்டைய துறைமுக நகரமான காலியைச் சுற்றி, அபிவிருத்தி மற்றும் பொருளாதார மறுமலர்ச்சியில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. 1885 ஆம் ஆண்டு கொழும்பு இறங்குதுறையாக அபிவிருத்தி செய்யப்பட முன்னர் காலி துறைமுகம் மிக முக்கியமானதொன்றாக காணப்பட்டதுட்ன, இது வீதி, புகையிரதம் மற்றும் மின்னஞ்சல் போன்ற வசதிகளைக் கொண்டிருந்தது. எவ்வாறாயினும் இருபதாம் நூற்றாண்டில் அமைதியான மற்றும் ஆரவாரமற்ற பிரதேசமாக இருந்தது.
ருஹுண பிரதேசம் தேயிலைக்கு பயிர்செய்கைக்கு தாமதமாகவே தேர்தெடுக்கப்பட்டது. 1900 ஆம் ஆண்டில் முதலாவது தோட்டங்கள் காலி மற்றும் மாத்தறையிலிருந்து தலைநகருக்கான வீதிகள் மற்றும் புகையிரதத்துடன் தொடர்புபடுத்துவது இலகுவான தூரத்தில் மத்திய மலைப்பகுதியின் அடிவாரத்தில் நட்டப்பட்டன. பெருந்தோட்ட நிறுவனங்களில் பெரும்பாலானவை பிரித்தானியருக்குச் சொந்தமானதாக பேணிவரப்பட்ட போது, ருஹுண இலங்கையின் பயிர்செய்கை சகோதரத்துவத்தின் ஆரம்ப கோட்டையாக மாறியது – இது ‘தேயிலை மனிதன்’ / ‘tea men’ மட்டுமல்ல, இறப்பர் மற்றும் பிற பயிர்செய்கைகளை மேற்கொள்வோரையும் உள்ளடக்கியிருந்தது.
1970 களின் முற்பகுதியில், மத்திய கிழக்கின் அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்கள் ருஹுணவின் சிறப்புவாய்ந்த வலுவான, முழுச் சுவை கொண்ட கருப்பு தேயிலைக்கான சந்தையை மென்மெலும் விஸ்தரித்தது. இதன் பெறுபேறாக ஒரு முன்னேற்றம் ஏற்பட்டது. அதன் பயன்கள் இன்று வரை தொடர்கின்றன. இலங்கையின் முக்கிய தேயிலை உற்பத்தி மாவட்டங்களில் ஒன்றான சப்ரகமுவவுடன் இணைந்து, ருஹுனா இப்போது அதன் தனித்துவமான அம்சங்களை உள்ளடக்கிய தேயிலை வகைகளை உற்பத்தி செய்கிறது. இந்த இரண்டு மாகாணங்களும் நாட்டின் மொத்த உற்பத்தியில் 60% வரை ஆதிக்கம் செலுத்துகின்றன.



