உட புஸ்ஸல்லாவை

மலைநாட்டின் கிழக்கு சரிவுகளில் அமைந்துள்ள கண்டி மற்றும் ஊவா மாவட்டங்களுக்கு மத்தியில் அமைந்துள்ள  உட புஸ்ஸல்லாவ ஒரு சிறிய, ஒடுக்கமான சனத்தொகையை கொண்ட ஒரு பிரதேசமாகும். முற்றிலும் தேயிலை பயிர்செய்கைக்கு  அர்ப்பணிக்கப்பட்டுள்ள மாவட்டம் ஆகும். இது பெரிய நகரங்களைக் கொண்டிருக்கவில்லை. மேலும் அதன் பயிரிடப்படாத பகுதியின் ஒரு பகுதி ஹக்கல அடர்த்தியான இயற்கை வனப் பகுதியால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும், 2000 மீற்றர் (6,400 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. இப்பகுதி அரிய வனவிலங்குகள் மற்றும் கவர்ச்சிகரமான தாவர இனங்களுக்கு பிரபலமானது; சிறுத்தைகள் காடுகள் நிறைந்த மலைகளில் இன்னும் சுற்றித் திரிகின்றன. மேலும் தேயிலை தோட்டங்களில் கூட அவ்வப்போது காணப்படுகின்றன. உட புஸ்ஸல்லாவ பிரதேசமானது மாதுரட்ட, ராகல மற்றும் ஹல்கிரானோயா ஆகிய உப மாவட்டங்களை உள்ளடக்கியது.

உட புஸ்ஸல்லாவ தேயிலை பற்றிய சுவையாளர்களின் குறிப்புகள்

உட புஸ்ஸல்லாவ- “அருமையான சுவை கொண்டது” “Exquisitely tangy”

உட புஸ்ஸல்லாவ, நுவரெலியாவிற்கு அருகாமையில் இருப்பதனால், அதன் தேயிலை பெரும்பாலும் அதன் அண்டை பிரதேசத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகிறது.  ஆனால் அது தேநீர் கோப்பையில் இருண்ட நிறத்துடன், இளஞ்சிவப்பு நிறத்துடன், அதிக வலிமையுடன், நேர்த்தியான சாயம் கொண்டதாக  இருக்கும்.  ஆண்டு இறுதியில் குளிர்ச்சியான காலநிலை, அதன் நடுத்தர மற்றும் நுட்பமான தன்மைக்கு பெயர் பெற்ற தேயிலையின் சுவையினை கொண்டுள்ளது. இருப்பினும், அதிக மழைப்பொழிவு, தேயிலையை இன்னும் கருமையாகவும் வலுவான சுவையுடனும் உற்பத்தி செய்ய ஏதுவாகிறது.

உட புஸ்ஸல்லாவ மற்றும் தேயிலை வரலாறு

அதன் அமைவிடம் காரணமாக, உட புஸ்ஸல்லாவ, மேற்கு தோட்டப் பகுதிகளிலிருந்து மிகவும் மாறுபட்ட காலநிலையை கொண்டுள்ளது.  அண்டை பிரதேசமான ஊவாவைப் போலவே, உட புஸ்ஸல்லாவ பிரதேசமும் அதன் வானிலையின் பெரும்பகுதியை வடகிழக்கு பருவமழையிலிருந்தே பெறுகிறது. இது நவம்பர் மற்றும் ஜனவரி மாதங்களுக்கு இடையில் மலைநாட்டின் கிழக்கு சரிவுகளுக்கு நீரைப் பெறுகின்றது.

இப் பிரதேசத்தின் காலநிலை பெரும்பாலும் ஈரமான மற்றும் மூடுபனியுடன் கூடியது.  ஹக்கல பிரதேசத்தில் ஒவ்வொரு வருடமும் சராசரியாக 211 நாட்கள் மழை பெய்யும். எனினும், ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் தென்மேற்கு பருவமழையால் இப் பிரதேசம் அதிக மழைவீழ்ச்சியை பெறுகின்றது.  மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் தங்கள் மலை வீழ்ச்சியை பதிவுசெய்து, இந்த பருவக்காற்றுகள் மத்திய நீரேந்து பரப்புக்களை கடந்துசெல்லும் போது பாலைவனம் போல இப் பிரதேசம் வறண்டுவிடும்.

உட புஸ்ஸல்லாவ தோட்டங்கள் இதற்கமைய, மேற்கு மற்றும் கிழக்கு என  இரண்டு ‘தரமான பருவங்களை’ அனுபவிக்கின்றன.  குறிப்பாக மாவட்டத்தின் மேல் பகுதியில் இருந்து வரும் தேயிலைகள், நுவரெலியாவின் எல்லையில் (இது மேற்கில் அமைந்துள்ளது) உள்ளவை சிறந்ததாக உள்ளன.  உட புஸ்ஸல்லாவையில் உள்ள தேயிலை தோட்டங்கள் உயரத்தின் அடிப்படையில்  நுவரெலியாவை விட சற்று குறைவாக இருந்தாலும், 950 மீற்றர் முதல் 1,600 மீற்றர் வரை (3,000-5,000 அடி)உயரம் கொண்டவையாக அமைந்துள்ளன.

This site is registered on wpml.org as a development site. Switch to a production site key to remove this banner.