இலங்கை தேயிலை சபையின் நிருவாகப் பிரிவு அனைத்து மனித வள முகாமைத்துவம், மனித வள அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் சபையின் பொது நிருவாக செயற்பாடுகளை உருவாக்குதல், நடைமுறைப்படுத்துதல், கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல் ஆகியவற்றிற்கு பொறுப்பாகும்.
திட்டமிடல், கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு நடவடிக்கைகள், SLTB நூலகத்தின் முகாமைத்துவம் மற்றும் பராமரிப்பு மற்றும் கொள்வனவு நடவடிக்கைகள், பாதுகாப்பு மற்றும் சபையின் பயன்பாட்டுச் சேவைகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்தல் மற்றும் எளிதாக்குவதற்கு இப்பிரிவு உதவுகிறது.



