திம்புலா

கண்டியிலிருந்து தெற்கு நோக்கி, நுவரெலியா மேட்டுநிலத்தை அடையும் வரை  மலைகள்  வானளவு உயர்ந்து நிற்கின்றன. அதனைத் தொடர்ந்து, நிலம் தொடர்ச்சியான சிகரங்களில் இறங்குகிறது மற்றும் மீண்டும் உயரும் முன் இரண்டாவது உயரமான மேட்டுநிலத்தை நோக்கி பயணிக்கின்றது. இது ஹோர்டன் சமவெளி என்று அழைக்கப்படுகிறது, அதன் விளிம்பிலிருந்து ஆயிரக்கணக்கான அடிக்கு கீழே உள்ள பிந்தென்ன காடுகளை நோக்கி அது வேகமாக கீழே சரிகிறது.  இந்த இரண்டு உயரமான மேட்டு நிலங்களுக்கு இடையில் தேயிலை வளரும் மாவட்டம் திம்புல (அல்லது, சில சமயங்களில் திம்புல்லை என உச்சரிக்கப்படுகிறது) அமைந்துள்ளது. பொகவந்தலாவ, டிக்கோயா, கொட்டகலை, மஸ்கெலியா, நானுஓயா மற்றும் தலவாக்கலை ஆகிய உப பிரதேசங்களால் சூழப்பட்ட இப்பகுதியின் மையப்பகுதியில் அமைந்துள்ள பள்ளத்தாக்கின் பெயரிலிருந்து இந்த திம்புல எனும் பெயர் பெறப்பட்டது.

இலங்கையின் இந்தப் பகுதியின் வரலாறு உண்மையில் தோட்டத்துறையுடன் ஆரம்பிக்கிறது, ஏனெனில் அதன் முன்னோடிகள் மலையகத்தைத் தொட ஆரம்பிப்பதற்கு முன்பு, அது மக்கள் வசிக்காத மற்றும் பெரும்பாலும் சென்றடைய முடியாத பிரதேசமாக இருந்தது.  இது உண்மையான “மாயரட்ட” அல்லது மாயைகளின் தேசம், பேய்கள் மற்றும் தீய ஆவிகளின் புகழ்பெற்ற இடம் ஆகும். அங்கு மிகவும் புறக்கணிக்கப்பட்டவர்கள் மற்றும் தப்பியோடியவர்கள் மட்டுமே இதுவரை துணிச்சலுடன் வாழ்ந்து வந்துள்ளார்கள். ஆயிரக்கணக்கான காட்டு யானைகள், பல்லாயிரக்கணக்கான மான்கள் வாழும் பிரதேசமாக இந்த ஹோர்டன் சமவெளி உள்ளது. இவை வேட்டையாடுபவர்கள் மற்றும் குடியேறுபவர்களிடமிருந்து பாதுகாப்பாக இருந்தன; கழுகுகள் கடும் காற்றில் பறந்து திரிந்தன, மலைப்பாம்புகள் மற்றும் சிறுத்தைகள் “ரோடோடென்ட்ரான்” காடுகள் மற்றும் அடர்ந்த, பாசி மேக-காடுகள் வழியாக அமைதியாக தங்கள் இரையை பின்தொடர்ந்தன, அங்கு அற்புதமான வடிவமும் வண்ணமும் கொண்ட மல்லிகை மரத்தின் தண்டுகளுக்கு இடையில் இருளில் ஒளிரும் – இவை அனைத்தும் மனிதன் அங்கு செல்லும் வரை கண்களினால் பார்க்கப்படவில்லை.

அதன் தனிமை 1870களில் தேயிலையின் வருகையுடன் முடிவுக்கு வந்தது.  உண்மையில், திம்புல, புதிய பயிர்கள் பயிரிடப்பட்ட ஆரம்ப மாவட்டங்களில் ஒன்றாகும். மாவட்டத்தின் தேயிலைகள் தங்களுக்கென ஒரு தனித்துவமான சுவையை உற்பத்தி செய்வதாகக் காணப்பட்டது, இன்றுவரை சிறந்த தேயிலையை விரும்புவோருக்குப் இது ஒரு சிறந்த பரிசாக உள்ளது.  இந்த மகிழ்ச்சியான கண்டுபிடிப்பு, முன்னர் மக்கள் வசிக்காத பகுதிக்கு குடியேற்றத்தையும் வர்த்தகத்தையும் கொண்டுவந்தது, இருப்பினும் திம்புல மற்றும் அதன் துணை மாவட்டங்கள் இன்றுவரை காடுகளாகவும், சனத்தொகை குறைவாகவும் உள்ள பிரதேசமாகவே உள்ளன.  பெரும்பாலான உள்ளூர்வாசிகள் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களாகவே உள்ளனர்; எஞ்சியவர்கள் போக்குவரத்து போன்ற பிற வழிகளில் தோட்டத் தொழிலுக்கு சேவை செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

திம்புலா தேயிலைகள் ‘உயர வளர்ந்தவை’/ ‘high-grown’ என வகைப்படுத்தப்படுகின்றன; பிராந்திய வரையறை 1,100m மற்றும் 1,600m (3,500-5,000ft.) இடையே உயரத்தைக் குறிப்பிடுகிறது, ஆனால் நடைமுறையில் பிராந்தியத்தின் தோட்டங்கள் அனைத்தும் 1,250m (4,000ft.) உயரத்தில் உள்ளன. இது ஆண்டு முழுவதும் ஈரமாகவும், பனிமூட்டம் மிக்கதாகவும் இருக்கும். மே மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழையால் மேற்கு நோக்கிய தோட்டங்கள் நனைந்துவிடும். எனினும், திம்புல மேற்கு பிரதேசம் ‘தரமான பருவத்தின்’ / ‘quality season’ குளிர்ந்த, வறண்ட காற்றிலிருந்து பயனடைகிறது. இது ஆண்டின் தொடக்கத்தில் ஆரம்பித்து மார்ச் அல்லது ஏப்ரல் தொடக்கம் வரை நீடிக்கும். இந்த பருவத்தில் திம்புல தோட்டங்களில் சிறந்த தேயிலை கொழுந்துகள் வளரும். காற்று மிருதுவாகவும், பகலில் குளிர்ச்சியாகவும் இருக்கும். மேலும் இரவுநேரம் குளிர்ச்சியாகவும் காற்று வீசுவதாகவும் இருக்கும்.

 

திம்புல – ” மென்மையாக புத்துணர்ச்சியூட்டும்“Refreshingly mellow”

நுவரெலியா மற்றும் ஹோர்டன் சமவெளிகளுக்கு இடையில் திம்புல மாவட்டம் அமைந்துள்ளது. அதன் தேயிலை “உயர வளர்ச்சி” /“high grown”  என்று குறிப்பிடப்படுகின்றன. அனைத்து தோட்டங்களும் 1,250m (4000 அடி) உயரத்திற்கு மேல் உள்ளதனால் இவ்வாறு அழைக்கப்படும். இப்பகுதியின் சிக்கலான நிலப்பரப்பு பல்வேறு மைக்ரோகிளைமேட்களை (microclimates) உருவாக்குகிறது. அவை சுவையில் வேறுபாடுகளை உருவாக்குகின்றன – சில சமயங்களில் சைப்ரஸுடன் கலந்த மல்லிகை போன்ற சுவை கொண்டவை. எவ்வாறாயினும், அனைவரும் திம்புல தேயிலையின் குணாதிசயங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். தேநீர் கோப்பையில் சிறந்த பொன்-ஆரஞ்சு நிறத்தை உருவாக்கும் மற்றும் புத்துணர்ச்சியூட்டும் மென்மையான குணம் கொண்ட தேயிலையாக இருக்கும்.

This site is registered on wpml.org as a development site. Switch to a production site key to remove this banner.