சப்ரகமுவ

சப்ரகமுவவுடன் மிகவும் நெருங்கிய தொடர்புடைய உற்பத்தி அல்லது கைத்தொழில் பெயரைக் கேட்டால், பெரும்பாலான இலங்கையர்கள் (மாணிக்க கல்) என்று கூறுவார்கள். இந்த வளமான மற்றும் அழகான மாகாணத்தின் பள்ளத்தாக்குகள் நீலக்கற்கள், சிவப்புக் கற்கள், சந்திரகாந்த, வைரோடியம் மற்றும் சப்பாயா உள்ளிட்ட விலைமதிப்பற்ற கற்கள் நிறைந்த வண்டல் மண்ணைக் கொண்ட பிரதேசமாகும்.

சப்ரகமுவாவின் சுரங்கங்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக காணப்பட்டுள்ளன, மேலும் சில அறிஞர்கள் அரேபிய இரவுகள் எனும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கமைய, சிந்துபாத் மாலுமியின் ஆறாவது பயணத்தில் விவரிக்கப்பட்டுள்ள ‘இரத்தினக்கற்களின் நிலம்’ மூலம் இந்த மாகாணத்தை அடையாளம் காண்கின்றனர். இதன் உண்மைத்தன்மை எவ்வாறு உள்ள போதும், ஐரோப்பியரின் வருகைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் மாகாணத் தலைநகரான இரத்தினபுரிக்கு முஸ்லிம்களான இரத்தினக் கல் வியாபாரிகள் அடிக்கடி வருகை தந்தனர். மேலும் அப்பகுதியில் இன்றும் பாரியளவிலான மற்றும் பலம்மிக்க முஸ்லிம் சமூகம் வாழ்ந்துவருவதுடன், அவர்கள் உள்நாட்டு இரத்தினக்கல் வியாபாரத்தில் முன்னோடிகளாக உள்ளார்கள்.

சப்ரகமுவ தேயிலை சுவையாளர்களின் குறிப்புகள்

சப்ரகமுவ – “அழகுக்கு விதிவிலக்காகும்” “Exceptionally stylish”

சப்ரகமுவ என்பது இலங்கையின் மிகப்பெரிய தேயிலை வளரும் பிரதேசம் அல்லது மாவட்டமாகும் என்பதுடன், அதன் தோட்டங்கள் கடல் மட்டத்திலிருந்து 610 மீற்றர் (2000 அடி) வரையான உயரத்தில் இருப்பதால், இங்கு “குறைந்த-வளர்ச்சி”/“low-grown”  தேயிலைகளாகவே விளைகின்றன. சப்ரகமுவ, தெற்கில் சிங்கராஜா காடுகளுக்கும் வடக்கே சிவனொளிபாத வனப்பகுதிக்கும் இடையில் நீண்ட இலைகளுடன் வேகமாக வளரும் தேயிலை செடிகளை உருவாக்குகிறது. தேயிலை சாயம், ருஹுனா தேயிலைகளைப் போலவே, அடர் மஞ்சள்-பழுப்பு நிறத்தில் சிவப்பு நிறத்துடன் இருக்கும். எவ்வாறாயினும், நறுமணமானது ருஹுனா தயாரிப்பில் இருந்து குறிப்பிடத்தக்க வகையில் வேறுபட்டதாகும். அதேவேளை நறுமணத்தில் இனிப்பான கேரமலின் சாயலைக் கொண்டுள்ளது. அவ்வளவு வலுவாக இல்லாவிட்டாலும் விசேடமாக அம்சங்களைக் கொண்டுள்ளது.

சப்ரகமுவ வரலாறு மற்றும் தேயிலை

மத்திய கிழக்கு மற்றும் முன்னாள் சோவியத் யூனியனில் சிலோன் தேயிலைக்கான சந்தைகள் விரிவாக்கப்பட்டதில் இருந்து தேயிலை கைத்தொழிலில் சப்ரகமுவாவின் முக்கியத்துவம் அதிகரித்தது. மிக உயரமான தோட்டங்கள் சிங்கராஜா மற்றும் மலை சார்ந்த வனப்பகுதியின் இயற்கை இருப்புக்களின் எல்லைக்குக் கீழே அமைந்துள்ளதுடன் மழைக்காடுகள், மேகக் காடுகள் மற்றும் உயரமான, புற்தரை சமவெளிகளில் உற்பத்தி செய்யப்படும் மைக்ரோக்ளைமேடிக் (microclimatic) நிலைமைகளில் பங்கு கொள்கின்றன. இதன் விளைவாக, மாவட்டத்தில் குறைந்த உயரத்தில் பயிரிடப்படும் தேயிலையை விட சற்றே வித்தியாசமான தன்மையைக் கொண்ட தேயிலை உற்பத்தி செய்யப்படுகின்றது. இவற்றில் சில தோட்டங்களுக்கே இங்குள்ள பெருந்தோட்டகங்களில் அதிக மழைவீழ்ச்சி கிடைக்கின்றன.

ஏனைய மேல் சப்ரகமுவ தோட்டங்கள் அருகிலுள்ள ஊவா காலநிலை அமைப்பிலிருந்து ஓரளவு மழைவீழ்ச்சியைப் பெறுகின்றன. இது அவர்கள் உற்பத்தி செய்யும் தேயிலையின் தன்மையை முற்றிலும் வேறுபட்ட முறையில் பாதிக்கிறது.

சப்ரகமுவ தேயிலை வளரும் பிரதேசமானது  இலங்கையின் மத்திய மலைகளின் மேற்கு மற்றும் தென்மேற்கு சாரளில் பெரும்பகுதியை உள்ளடக்கியது. நிலப்பரப்பு மலைப்பாங்கானது. பல்வேறு சிறிய பள்ளத்தாக்குகள் மலைப்பகுதிகளில் நீரோடைகள் மற்றும் ஆறுகள் மூலம் அழங்கரிக்கப்படுகின்றன.  தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழையால் அதிகளவு நீர் பாய்ச்சப்படுகிறது. இது உலர்வலய மழைக்காடுகளின் வழக்கமான வெப்ப நிலைகளைக் கொண்டுள்ளது: திறந்தவெளியில் வெப்பம் மற்றும் ஈரப்பதம், மரங்கள் அடர்த்தியாக இருக்கும் ஈரமான மற்றும் குளிர்ச்சியான இடங்களில். அடர்த்தியான மக்கள்தொகை கொண்டதாக இருந்தாலும், இயற்கை அழகு நிறைந்த பசுமையான மற்றும் அழகான நிலமாக உள்ளது. ஆதமின் சிகரம் அல்லது சிவனொளி பாத மலை, 2,200 மீற்றர் (7,000 அடி) மலை உச்சி, கூம்பு மற்றும் சமச்சீர், அதன் உச்சியில் ஒரு மாபெரும், சிக்கலான-அழங்கரிக்கப்பட்ட மற்றும் விரிவான தடத்தை பாறையில் செதுக்கப்பட்டதாக காணப்படுகின்றது. பௌத்தர்கள், இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைவரும் சிவனொலிபாத மலையை தரிசிக்க வருகின்றார்கள். சிவனொளி பாத மலை யாத்திரை, மலையேறுவது செங்குத்தானதாகவும், மிகவும் ஆபத்தானதாகவும் உள்ள போதும், யாராலும் எளிதில் மறக்க முடியாத நீண்ட காலம் எடுக்கின்ற யாத்திரைக்கான மற்றும் சுற்றுலா முடிவொன்றாக இது அமைந்துள்ளது.

சிவனொளி பாத மலை என்பது வரலாறு மற்றும் புராதனக் கதைகள் நிறைந்த ஒரு நாட்டின் மிக முக்கியமான மனங்கவர் இடமொன்றாகும். உண்மையில், இலங்கையில் 34,000 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலான மனித குடியேற்றத்தின் ஆரம்ப தடயங்கள் இரத்தினபுரிக்கு அருகில் உள்ளன.  பண்டைய இந்து வரலாற்றுக் காவியமான ராமாயணத்துடன் தொடர்புடைய பல்வேறு புராணக்கதைகள் சப்ரகமுவாவில் உள்ள இடங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன; இப்பகுதி வரலாறு மற்றும் நாட்டுப்புறக் கதைகளில் பல முக்கியமான அங்கங்களைக் கொண்டுள்ளதுடன் போர்த்துக்கேயரின் காலத்தில் (1505-1658) போர் மற்றும் ஆர்வத்தைத் தூண்டும் இடமாக இருந்தது. சப்ரகமுவாவின் தோட்டங்களில் இருந்து கிடைக்கும் தேயிலை இந்த வளமான மற்றும் மாறுபட்ட கலாச்சாரத்தின் சாரத்தை வடிகட்டுவது போல் தெரிகிறது. இது மாவட்டத்தின் இருபதாம் நூற்றாண்டில் தேயிலை கைத்தொழிலில் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

This site is registered on wpml.org as a development site. Switch to a production site key to remove this banner.