
1880 களின் தொடக்கத்தில் இருந்து, சிலோன் தேயிலை (Ceylon Tea) பல தலைமுறைகளாக இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பாக அமைந்ததுள்ளதுடன், நாட்டின் முக்கியமான மற்றும் மிகவும் பிரபல்யமான ஏற்றுமதி உற்பத்தியாக மாறியுள்ளது. இக்கதை்தொழில் துரிதமாக வளர்ந்து வரும் போது, தேயிலை பயிர்செய்கை, தயாரிப்பு மற்றும் உற்பத்தி ஆகிய செயற்பாடுகளை ஒரு கட்டமைப்புக்குள் ஒழுங்குபடுத்த வேண்டிய தேவையும் எழுந்தது.
இதனை அடுத்து, 1976 ஆம் ஆண்டில், இலங்கை தேயிலை சபை, இலங்கையின் தேயிலை கைத்தொழிலின் முன்னோடி ஒழுங்குறுத்தல் மற்றும் நிர்வாக நிறுவனம் என்ற வகையில் பயிர்செய்கையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் தோட்ட ஊழியர்கள் உட்பட கைத்தொழிலுடன் சம்பந்தப்பட்ட தனியார் மற்றும் அரசாங்க நிறுவனங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கியதாக தாபிக்கப்பட்டது.



