இலங்கை தேயிலை சபைக்கு அன்புடன் வரவேற்கின்றோம்

இலங்கை தேயிலை கைத்தொழிலின் உச்சநிலை ஒழுங்குறுத்தல் மற்றும் நிருவாக நிறுவனமான இலங்கை தேயிலை சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

இலங்கை தேயிலை சபையானது, விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் தோட்ட ஊழியர்கள் உட்பட, கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள தனியார் மற்றும் அரச நிறுவனங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கியது. வர்த்தகம் மற்றும் வணிகம், பிரச்சாரம் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கங்களை ஊக்குவித்தல் மற்றும் எதிர்கால சிந்தனை மற்றும் முற்போக்கான தேசியக் கொள்கை சட்டகத்தை உருவாக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் நாட்டின் முதன்மையான மற்றும் மிகவும் பிரபல்யமான ஏற்றுமதியாக உள்ள சிலோன் தேயிலையின் வளர்ச்சிக்கு உந்துசக்தியாக நாங்கள் செயற்படுகிறோம்.

Tea Production தேயிலை உற்பத்தி 6% அதிகரித்துள்ளது. Regal 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தேயிலை உற்பத்தி 62 மில்லியன் கிலோவாக இருந்தது, அதே நேரத்தில் 2024 ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் இது 58 மில்லியன் கிலோவாக இருந்தது.
Tea sales முதல் காலாண்டில் ஏல விற்பனை வருமானம் 74 பில்லியனை பதிவு செய்தது. Regal முதல் காலாண்டில் உள்ளூர் ஏலத்தில் ரூ. 74 பில்லியன் பதிவானது, கடந்த ஆண்டு இதே காலத்தில் இது ரூ. 83 பில்லியனாக இருந்தது.
Tea exports ஏற்றுமதி மூலம் அமெரிக்க டாலர் வருவாய் 5% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. Regal 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஏற்றுமதி வருவாய் 371 அமெரிக்க டாலர் மில்லியனைப் பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது 355 அமெரிக்க டாலர் மில்லியனாக இருந்தது.

செய்திகள் மற்றும் விசேட நிகழ்வுகள்

சிலோன்  தேயிலை (Ceylon Tea) <span>தரத்தின் அடையாளச் சின்னம்</span>

சிலோன் தேயிலை (Ceylon Tea) தரத்தின் அடையாளச் சின்னம்

இலங்கை தேயிலை சபைக்கு சொந்தமான சின்னம் உலகளாவிய ரீதியில் வர்த்தகக் குறியீட்டு சின்னமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. உங்கள் தேயிலை பொதியில் உள்ள சிங்கத்தின் சின்னம் இலங்கையில் தயாரிக்கப்பட்ட 100% தூய சிலோன் தேயிலைக்கான உத்தரவாதமாகும். நீங்கள் வாங்குவது சிலோன் தேயிலை (Ceylon tea) என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு சிங்க சின்னத்தை பார்த்து கொள்வனவு செய்யவும்.

சிங்க சின்னத்தை பயன்படுத்துவதற்கான விண்ணப்பம் மற்றும் வழிகாட்டல்கள்
சிங்க சின்னத்தை பெறுவதற்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்பதற்கான விபரங்களைப் பார்க்கவும் மேலும் பார்க்க

விடயங்கள் மற்றும் புள்ளி விபரங்கள்

தேயிலை கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் முக்கியமான சில விடயங்கள் மற்றும் புள்ளிவிபரங்கள்

தேயிலை புள்ளிவிபரங்கள்

தேயிலை தரகர்களால் நடத்தப்படும் தேயிலை ஏலத்திலிருந்தே தேயிலை தொடர்பான புள்ளிவிவரங்கள் பெறப்படுகின்றன.

தேயிலை பதிவிறக்கங்கள்

இலங்கை தேயிலை சபையின் புதிய பதிவிறக்கங்கள்

வெளியீடுகள்

இலங்கை தேயிலை சபையின் அண்மைக்கால வெளியீடுகள்

பதிவு செய்தல்

இலங்கை தேயிலை சபையில் (SLTB) பதிவு செய்வதற்கான உத்தியோகபூர்வ விண்ணப்பப் படிவங்களுக்கான விரைவான பிரவேசம்

தேயிலை ஆணையாளர் பிரிவு

தேயிலை ஏற்றுமதி பிரிவு

தேயிலை மேம்படுத்தல் பிரிவு

ஆய்வுகூட பிரிவு

தேயிலை சுவைத்தல் பிரிவு

நிவாரண மானியத் திட்டம் தேயிலை ஆணையாளர் பிரிவு

எமது பிரிவுகள்

தேயிலை ஆணையாளரின் பிரிவு

இலங்கை தேயிலை சபையின் தேயிலை ஆணையாளர் பிரிவானது, தேயிலை பயிர்ச்செய்கை, உற்பத்தி மற்றும் தர மேம்பாடு தொடர்பான முக்கிய செயற்பாடுகளை ஒழுங்குறுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

தேயிலை உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிற்சாலைகளின் பதிவு, புதுப்பித்தல் மற்றும் கண்காணிப்பு
தேயிலை உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிற்சாலைகளின் பதிவு, புதுப்பித்தல் மற்றும் கண்காணிப்பு

தேயிலை மேம்படுத்தல் பிரிவு

இலங்கை தேயிலை சபையின் ஊக்குவிப்பு பிரிவு, உலகம் முழுவதும் சிலோன் தேயிலையின் (Ceylon Tea) வகிபாகத்தை வரைவிலக்கணம் செய்தல், மேம்படுத்தல் மற்றும் பாதுகாத்தல் போன்ற விடயங்களுக்கான பொறுப்பைக் கொண்டுள்ள பிரிவாகும்.

விளம்பரம், மேம்படுத்தல் மற்றும் மக்கள் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு வகையான செயற்பாடுகளை இப் பிரிவு மேற்கொள்கிறது.
சர்வதேச வர்த்தக கண்காட்சிகள் மற்றும் பிற முக்கிய கைத்தொழில்சார் நிகழ்வுகளில் இலங்கை மற்றும் சிலோன் தேயிலையை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

தேயிலை ஏற்றுமதி பிரிவு

இலங்கை தேயிலை சபையின் ஏற்றுமதிப் பிரிவு, 1959 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க தேயிலை (வரி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடு) சட்டத்தின் மூலம் இலங்கை தேயிலை சபைக்கு வழங்கப்பட்டுள்ள தத்துவங்களுக்கு அமைய பல்வேறு முக்கிய செயற்பாடுகளை ஆற்றி வருகின்றது.

இலங்கை சுங்க ஏற்றுமதி வசதி மையத்தில் (EFC) தேயிலை இருப்புக்கள் பற்றிய 24/7 நடவடிக்கைகள் மற்றும் கூட்டு விசாரணை
ஈரானுக்கு ஏற்றுமதி செய்வதற்கான G.M.P சான்றிதழை வழங்குதல்

பகுப்பாய்வு ஆய்வுகூடம்

சிலோன் தேயிலையின் தர உத்தரவாதம் தொடர்பாக இலங்கை தேயிலை கைத்தொழிலின் பரிசோதனை மற்றும் சான்றிதழ் தேவைகளை பகுப்பாய்வு ஆய்வுக்கூடம் இலகுபடுத்துகின்றது.

அங்கீகரிக்கப்பட்ட ISO சர்வதேச தரநியமங்களுக்கு அமைய பகுப்பாய்வுகளை மேற்கொள்ளல்.
சிலோன் தேயிலையின் உயர் தரத்தை அடைந்துகொள்ளவும், பேணிவருவதற்கும் ஆலோசனை வழங்குதல், கண்காணித்தல், ஆய்வு மற்றும் வழிகாட்டல்களை மேற்கொள்ளல்.

தேயிலை சுவைத்தல் பிரிவு

ஏலம்விடுதல் மற்றும் ஏற்றுமதிக்கு முன்னதாக சிலோன் தேயிலையின் தரத்தை மதிப்பீடு செய்வது தேயிலை சுவைத்தல் பிரிவின் பொறுப்பாகும்.

அதன் சுயாதீன தேயிலை சுவைப்பாளர்கள் குழு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் தேயிலைகளை மதிப்பீடு செய்தல், ஒப்பிடுதல் மற்றும் விலைமதிப்புச் செய்தல் ஆகியவற்றை மேற்கொள்கிறார்கள்.
தரத்தின் சின்னமாக விளங்கும் சிங்க சின்னத்தை பதிவு செய்தல்.

தகவல் தொழில்நுட்ப மற்றும் புள்ளிவிபரப் பிரிவு

தகவல் தொழில்நுட்ப மற்றும் புள்ளிவிபரப் பிரிவு, இலங்கையில் தேயிலை கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள அல்லது ஆர்வமுள்ள எவருக்கும் தொடர்புடைய நம்பகமான மற்றும் இற்றைப்படுத்தப்பட்ட த தகவல்களை பெறுவதற்கு விரிவான மற்றும் வசதியான பிரவேசத்துக்கான தனியான நிலையமாக செயற்படுகிறது.

விஸ்தரிக்கப்பட்ட வலையமைப்பு மூலம் விவசாயி, உற்பத்தியாளர் மற்றும் சந்தை தகவல்களை திரட்டுதல்.
சர்வதேச தேயிலை குழுவுடன் தகவல் பரிமாற்றம் செய்துகொள்ளல்

நிருவாக பிரிவு

நிருவாகப் பிரிவு அனைத்து மனித வள முகாமைத்துவம், மனித வள அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் சபையின் பொது நிருவாக நடவடிக்கைகளை தயார் செயதல், அமுல்படுத்தல், கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல் ஆகியவற்றிற்கு பொறுப்பாகும்.

நிதிப் பிரிவு

இலங்கை தேயிலை சபையின் ஒட்டுமொத்த நிதிக் கட்டுப்பாடு மற்றும் நிதி நிருவாகத்திற்கு நிதிப் பிரிவு பொறுப்பாக உள்ளது. நிதிப் பிரிவின் மற்றைய முக்கிய செயற்பாடுகளாக சபைக்கான நிதிக் கொள்கைகளைத் தயாரித்தல், வருடாந்த வரவுசெலவுத் திட்டம், வருடாந்த நிதி அறிக்கைகள், மாதாந்த கணக்குகள் மற்றும் பருவகால அறிக்கைகள், இருப்பு பராமரிப்பு மற்றும் வருடாந்த பொருட் கணிப்பீடு மற்றும் வருடாந்த கணக்குகளை கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு சமர்ப்பித்தல் போன்றன உள்ளன.

உள்ளக கணக்காய்வு பிரிவு

உள்ளக கணக்காய்வு பிரிவின் நோக்கம், முக்கிய பங்குதாரர்களான இலங்கை அரசாங்கம், தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள், தேயிலை தோட்ட உரிமையாளர்கள், தேயிலை வர்த்தகர்கள், தேயிலை துறை தொழிலாளர்கள் மற்றும் இலங்கையில் உள்ள பொதுமக்கள் ஆகியோரின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதற்காக அதன் நிதி, நிர்வாகம் மற்றும் மனித வளங்களை ஒதுக்குவதற்கு உள்ளக கணக்காய்வு நடவடிக்கைகளை சிறந்தமுறையில் அமுல்படுத்துவதாகும்.

Ozone Friendly Logo

ஓசோனுடனான பாதிப்பற்ற சாதகமான தூய சிலோன் தேயிலை

இலங்கையில் பயிரிடப்படும் அனைத்து தேயிலைகளும் இப்போது நூறு வீதம் ஓசோன் படலத்திற்கு மிகவும் பாதகமற்றதாக உள்ளது. எனவே அடுத்த முறை நீங்கள் ஒரு கோப்பை சிலோன் தேயிலையை பருகும் பொழுது, பூமியில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் முக்கியமாக சுற்றுச்சூழல் வளத்தையும் நீங்கள் பாதுகாக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஓசோன் நட்பு சின்னத்தைப் பயன்படுத்துவதற்கான விண்ணப்பம்
சின்னத்தை பெறுவதற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது பற்றிய மேலதிக விவரங்களை பார்வையிடுவதற்கு. மேலும் பார்க்க

பங்குதாரர் அமைப்புகள்

இலங்கை தேயிலை சபையுடன் இணைந்த பங்குதாரர் நிறுவனங்கள்

தேயிலை கைத்தொழிலின் நிலைபேறான அபிவிருத்தி மற்றும் வளர்ச்சியை உறுதி செய்வதற்காக இலங்கை தேயிலை சபை பல்வேறு பங்குதாரர் நிறுவனங்களுடன் நெருக்கமாக பணியாற்றி வருகின்றது.

கொழும்பு தேயிலை வியாபாரிகள் சங்கம்

இது விற்பனையாளர்கள் மற்றும் கொள்வனவாளர்கள் மற்றும் தரகர்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு சங்கமாக 1894 இல் ஆரம்பிக்கப்பட்டது. மேலும் 1975 ஆம் ஆண்டு முதல் இலங்கை தேயிலை சபையால் முன்னெடுக்கப்படும் வாராந்த தேயிலை ஏலத்தை நடத்துவதற்கு பெரிதும்பொறுப்பானதும் ஆகும். CTTA என்பது இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் கூட்டிணைந்த அங்கத்தவம் கொண்ட ஒரு அமைப்பாகும்.

இலங்கை பெருந்தோட்ட செய்கையாளர்களின் சங்கம்

பெருந்தோட்டத் துறையின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மிகப் பமைமைவாய்ந்த பெருந்தோட்ட அமைப்பு இதுவாகும். இன்று பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளின் குரலாகச் செயற்படுகின்ற பிரதான அமைப்பாக விளங்குகிறது.

கொழும்பு தரகர்கள் சங்கம்

1979 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க உற்பத்தி தரகர்கள் சட்டத்தின் உரிமப்பத்திரத்தின் கீழ் இலங்கை தேயிலை சபையினால் உரிமப்பத்திரம் பெற்ற 8 தரகர்களை உள்ளடக்கிய ஒரு சங்கம் ஆகும்.

தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கம்

தேயிலை ஏற்றுமதியாளர்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக 1999 இல் நிறுவப்பட்ட ஒரு சங்கம் ஆகும். இது 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ், கம்பனி பதிவாளரிடம் ஒரு சங்கமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம்

சிறிய தேயிலை தோட்ட உரிமையாளர்கள் மற்றும் பாரியளவிலான பயிர்செய்கையாளர்கள் வழங்கும் பசுமை நிறம் கொண்ட கொழுந்து உற்பத்திக்கு முக்கியமாகப் பொறுப்பைக் கொண்டதாக தனியார் தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்களின் பெரும் எண்ணிக்கையானோரை பிரதிநிதித்துவப்படுத்தி 1990 இல் தாபிக்கப்பட்டது.

ஆவணங்கள்

தேயிலைதொடர்பான சில முக்கியமான ஆவணங்களைப் பார்வையிட:

வெற்றிடங்கள்

வெற்றிடங்களுக்கான விண்ணப்பப்படிவங்களை பார்க்கவும் பதிவிறக்கம் செய்வதற்கும்

HSC குறியீடுகளின் (HSCODES) பட்டியல்

ஏற்புடையதான HS குறியீடுகளின் (HSCODES) முழுப் பட்டியலைப் பார்க்கவும்

கட்டணங்கள்

ஏற்புடையதான கட்டணங்கள் பற்றிய இற்றைப்படுத்தப்பட்ட தகவல்களை பெற்றுக் கொள்ள

Tea-growing Regions of Sri Lanka

This site is registered on wpml.org as a development site. Switch to a production site key to remove this banner.