ஓசோனுக்கு சாதகமான செய்தி

ஓசோன் படலத்தை பாதுகாத்தல்

ஓசோன் என்பது, இரண்டு அணுக்களுக்குப் பதிலாக மூன்று அணுக்களால் ஆன ஒரு விசேட வகை ஒட்சிசன் மூலக்கூறுகளால் உருவான ஒரு வாயு ஆகும். பூமியின் வளிமண்டலத்தில் மிக்க உயரமான இடத்தில் அதிகளவிலான வாயுக்கள் கொண்ட  ஓசோன் படலம் உள்ளது. இது சூரியனிலிருந்தும் பிற இடங்களிலிருந்தும் நேரடியாக பூமியின் மேற்பரப்பை வந்தடையும் புற ஊதா (UV) ஒளி மற்றும் உயர் ஆற்றல் கதிர்வீச்சுக்களுக்கு கவசமாக செயற்படுகிறது.

இந்த வகையான கதிர்வீச்சு உயிருக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதாக அமையும், கருவுறுதல் மற்றும் இனப்பெருக்கம் மற்றும் பிறப்பின் போதான குறைபாடுகள், புற்றுநோய்கள் மற்றும் பிற நோய்களுக்கும் வழிவகுக்கும். மனிதர்கள் மற்றும் பிற நில உயிரினங்கள், பயிர்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் அனைத்தும் இவற்றின் விளைவுகளால் பாதிக்கப்படக்கூடியவை. மேலும், வளிமண்டலத்தில் அதிகளவான ஓசோன் படலம் இருப்பதனால் வானிலை மற்றும் காலநிலையில் முக்கியமான மற்றும் சீரான ஒழுங்குமுறையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

ஓசோன் படலத்திற்கான அச்சுறுத்தல்கள்

1970 களில், பூமியின் வளிமண்டலத்தை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் ஓசோன் படலம் அதன் மேல் மட்டத்திலுள்ள பகுதிகள் காணாமலாகி வருவதை கண்டுபிடித்தனர். 1985 ஆம் காலப்பகுதியில், அண்டார்டிகாவுக்கு மேலே உள்ள மிகப் பெரிய பகுதி பெரும்பாலும் முற்றிலும் வாயு இல்லாமல் இருந்தது. இந்த குறைபாட்டிற்கான காரணம் விரைவில் அடையாளம் காணப்பட்டது. குளோரோபுளோரோகார்பன் கலவைகள் அல்லது சுருக்கமாக CFC கள் என – ஒரு வகை இரசாயனங்களின் வகைகள் இதற்குக் காரணமாகும்.  இவை பொதுவாக குளிர்சாதன பெட்டிகள், அதிகுளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் குளீரூட்டிகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

CFCகள் மேல் வளிமண்டலத்தில் உயர்ந்து சென்று, அங்குள்ள ஓசோன் படலத்துடன் எதிர்வினைந்து அதனை அழிக்கிறது. மேலும் CFCகளைத் தவிர, மற்றொரு தீங்கு விளைவிக்கும் வாயுவும் இருந்தது: மீதைல் புரோமைடு (methyl bromide),  மண் மற்றும் பல விவசாயப் பொருட்களைப் புகைக்கப் பயன்படும் பூச்சிக்கொல்லி. இது கண்டறியப்பட்ட போது, இலங்கை தேயிலை தொழிலில், தோட்டங்கள் மற்றும் களஞ்சியங்களில், கப்பல்கள் மற்றும் தேயிலை சேமித்து வைக்கப்படும் அல்லது கொண்டு செல்லப்படும் இடங்கள் ஆகியவற்றில் மீதில் புரோமைடு பூச்சிக்கொல்லிகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்தன. வானத்தில் 10-15 கி.மீ. உயரத்தில் இந்தப் பூச்சிக்கொல்லிகள் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் என்று யாரும் சந்தேகிக்கவில்லை! ஆனால் இலங்கை தேயிலை தொழில்துறையின் அளவு மற்றும் புவியியல் பரவலைக் கருத்தில் கொண்டு, அதன் மைதில் புரோமைட்டின் (methyl bromide) பயன்பாடு ஓசோன் படலத்திற்கு உண்மையான பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.

மொண்ட்ரீல் வரைவும், அதன் பின்னரும்,

விஞ்ஞானிகள் விடுத்த எச்சரிக்கையால் பீதியடைந்த உலக நாடுகள், ஓசோன் படலத்தைப் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்வது பற்றி 1987 இல் கனடாவில் உள்ள மொண்ட்ரியல் நகரில் ஒன்று கூடி கலந்துரையாடின. இந்தக் கூட்டத்தில் இலங்கை உட்பட 191 நாடுகள் இணங்கி கைச்சாத்திட்ட மொண்ட்ரியல் பிரகடனம் நடைமுறைக்கு வந்தது. இப்பிரகடனத்திற்கு அமைய, இலங்கையில் தேயிலை கைத்தொழிலில் மைதில் புரோமைட் (methyl bromide) பயன்பாடு படிப்படியாக குறைக்கப்பட்டதுடன் பின்னர் இது முற்றாக பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டது. தேயிலை கைத்தொழில்துறை மற்றும் ஏனையவர்களின் இத்தகைய உடனடி மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளின் விளைவாக, இலங்கை ‘ஓசோன் படலப் பாதுகாப்பில் முன்னோடி’ என்று பாராட்டப்பட்டதுடன், 2007 இல் “Montreal Protocol Implementers” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

உங்களுக்கும்…. மற்றும் ஓசோன் படலத்திற்கும் புத்துணர்ச்சியளித்தல்

தற்பொழுது இலங்கையில் பயிரிடப்படும் அனைத்து தேயிலைகளும் நூற்றுக்கு நூறு வீதம் ஓசோன் படலத்துக்கு சாதகமானதாகும். வேறு எந்த தேயிலை உற்பத்தி செய்யும் நாடும் பெருமைப்பட முடியாத தனிச்சிறப்பு ஆகும். ஏற்றுமதிக்காக செய்யப்படும் பொதி (பக்கேஜிங்) மற்றும் கப்பலேற்றல் போன்ற பயன்பாடுகளில் மெத்தில் புரோமைடு (methyl bromide) பயன்படுத்துவதற்கு முழு தடை விதிக்க இப்போது திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.

மே 2011 முதல், அனைத்து இலங்கை தேயிலைக்கும் புதிய “ஓசோன் நட்பு தூய சிலோன் தேயிலை” / “Ozone Friendly Pure Ceylon Tea” சின்னத்தை தாங்கும் உரிமை உண்டு, இது ஓசோன் படலத்தை அழிக்கும் பொருட்களைப் பயன்படுத்தாமல் உற்பத்தி செய்யப்பட்டது என்று சான்றளிக்கிறது.

நீங்கள் ஒரு கோப்பை சிலோன் தேயிலையை (Ceylon Tea) சுவைக்கும் பொழுது, நீங்கள் உங்களை மாத்திரம்  புத்துணர்ச்சியடையச் செய்வதில்லை; பூமியில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் முக்கியமான சுற்றுச்சூழல் வளத்தைப் புதுப்பிக்கவும் புத்துணர்வடையச் செய்யவும் உதவுகிறீர்கள்.

This site is registered on wpml.org as a development site. Switch to a production site key to remove this banner.