ஊவா இலங்கையின் தூரமான இடத்தில் அமைந்துள்ள மாகாணமாகும். கண்டி அல்லது நுவரெலியாவிலிருந்து நேரடியாக பார்க்கும் போது அண்மித்த தூரத்தில் அமைந்துள்ள போதும், அதன் மாகாண தலைநகரான பதுளைக்குச் செல்ல செங்குத்தான, வளைந்த மலைப்பாதைகளில் பயணித்தால் மாத்திரமே செல்ல முடியும். கொழும்பில் இருந்து அங்கு செல்ல, ஒருவர் நாட்டின் உட்புறமாக பயணிக்க வேண்டும் என்பதுடன், பின்னர் நாட்டின் மத்திய மலைத்தொடரின் முழு தெற்குப் பகுதியையும் சுற்றி வடக்கே திரும்பி மலைகளில் ஏற வேண்டும். இலங்கையின் ஏனைய முக்கிய பெரும்பாலான கடற்கரை பிரதேசங்களில் அமைந்துள்ள நகரங்களிலிருந்து செல்வது கடினமாகும்.
ஆங்கிலேயரின் ஆரம்ப காலத்தில் கொழும்பில் இருந்து பதுளைக்கு பயணம் என்பது சுமை சுமக்கும் மிருகங்கள், பழங்குடி சுமை சுமப்பவர்கள், கூடாரங்களில் இரவுகள் மற்றும் காட்டு விலங்குகளை ‘உணவுக்காக ’ வேட்டையாடும் ஒரு கடினமான பயணமாக இருந்தது. முழு பயணமும் பல நாட்கள் வரை நீடிக்கும். கொழும்பை மலையகத்துடன் இணைக்கும் ஒற்றை ரயில் பாதை 1924 ஆம் ஆண்டுகளிலேயே பதுளையை வரை சென்றடைந்தது.
ஊவா தேயிலை சுவையாளர்களின் குறிப்புகள்
ஊவா – “விசித்திரமான நறுமணம் கொண்டது” “Exotically aromatic”
தூர ஊவா மாவட்டம் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழையின் காற்று ஆகிய இரண்டு காலநிலை பருவங்களையும் கொண்டுள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் தேயிலை ஒரு தனிச்சிறப்பு, தெளிவற்ற தன்மை மற்றும் அயல்பிரதேச நறுமண சுவையை வழங்குவதாக நம்பப்படுகிறது. விக்டோரியன் அதிபரான தாமஸ் லிப்டன், தனது ஊவா தோட்டங்களில் விளைந்த தேயிலை மூலம் அமெரிக்கர்களை தேநீர் அருந்தத் தூண்டினார். ஊவா தேயிலையின் மெல்லிய, மென்மையான சுவையை ஒருமுறை அனுபவித்தால், எளிதில் இனங்காணக்கூடியதாக இருக்கும்.
ஊவா மற்றும் தேயிலையின் வரலாறு
இன்னும் இலங்கையின் இரண்டாவது குறைந்த சனத்தொகையைக் கொண்ட மாகாணமாக உள்ள ஊவா இன்று பெருந்தோட்டப் பயிர்களைச் சார்ந்து மிதமான பொருளாதாரத்தைக் கொண்டுள்ள பிரதேசமாக உள்ளது: மலைப் பிரதேசங்களில் தேயிலை மற்றும் சமவெளிப் பிரதேசங்களில் கரும்பும் காணப்படுகின்றது. இது தவிர, பெரும்பாலான விவசாயப் பயிர்செய்கை வாழ்வாதார வகையாகும் மற்றும் சிறிய கைத்தொழில்களும் இங்கு உள்ளன. இந்த மாகாணம் பதுளை மற்றும் மொனராகலை ஆகிய இரண்டு நிருவாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: இரண்டாவது தெற்கே, மற்றும் தாழ்வான, மரங்கள் நிறைந்த மலைகளால் மூடப்படாத சமதரையான பகுதியாகும்; முதலாவது மத்திய தென்கிழக்கு சரிவுகளில் அமைந்துள்ளது மற்றும் ஊவாவின் தேயிலை வளரும் பகுதியை குறிக்கிறது. பண்டைய காலங்களில், இந்த மலைகள் இன்று இருப்பதைப் போலவே சிறு சனத்தொகையுடன் இருந்தன; எவ்வாறாயினும், இலங்கையின் மத்திய கால யுகத்தில் சிக்கலான நூற்றாண்டுகளில் பதுளை இடையிடையே தப்பியோடிய இளவரசர்கள் மற்றும் கண்டி மன்னரின் பாதுகாப்பான தலைநகராக இருந்தது.
இப் பிரதேசத்துக்கான தெளிவற்ற வரலாறு உள்ள போதும், பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெருந்தோட்ட நிறுவனங்களின் வருகைக்குப் பிறகுதான் இப்பகுதி உண்மையிலேயே புத்துயிர்பெறத் தொடங்கியது. ஆரம்பகால ஊவா பெருந்தோட்டக்காரர்கள், நுவரெலியாவுக்குச் செல்ல வேண்டியது அபாயகரமான வீதிகள் மற்றும் பாலங்கைள் கொண்ட பாதை வழியாக நீண்ட தூரம் பயணித்தால் மட்டுமேயாகும்; எனவே அவர்கள் அதற்கு பதிலாக பதுளை நகரில் ஒன்றுகூடி, நகரத்தின் சமுதாய மற்றும் வணிக வளர்ச்சியை துரிதப்படுத்தினர்.
அப்போதும் கூட, அது ஒரு அமைதியான, மாறாக நித்திரையில் உள்ள மாகாணமாக இருந்தது. ஊவா கோப்பி பயிர்செய்கைக்கு குறிப்பாக நல்லதல்ல, தூர இடத்தில் அமைந்திருந்ததன் காரணமாக கடைசி பயிர்செய்கை கொண்டு வரப்பட்ட நாட்டின் பகுதிகளில் ஒன்றாகும். தேயிலையின் வருகையால் மட்டுமே மாவட்டத்தின் முழுத் திறன் உணரப்பட்டது. ஊவாவின் மலைகள் மற்றும் காற்று அங்கு விளையும் தேயிலைக்கு ஒரு விசேட, தெளிவற்ற தன்மை மற்றும் சுவையை அளிக்கிறது. இது சந்தை மற்றும் சுவையாளர்களால் மிக்க உயர்வாக மதிக்கப்பட்டது.
வல்லுநர்கள் இந்த தனித்துவமான தன்மையை பெரும்பாலும் ஊவா காலநிலையே காரணம் என்று கூறுகின்றனர். வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவப் பெயர்ச்சிமழை காற்று இப்பகுதிக்கு அதிகமாக கிடைக்கின்றது. ஆனால் வானிலை ஒப்பீட்டளவில் வறண்டது. குறிப்பாக ‘தரமான பருவத்தில்’ / the ‘quality season’. ஒவ்வொரு சரிவு மற்றும் பள்ளத்தாக்கின் காலநிலை சமநிலை அதன் செங்குத்தான நிலை மற்றும் வெளிப்படைத்தன்மை மூலம் நிர்வகிக்கப்படுகிறது; மலைகள் ஆழமான கணவாய்கள் ஓஹியா மற்றும் இதள்கஸ்ஹின்ன போன்ற ‘சமவெளிகளால்’ பிரிக்கப்பட்டுள்ளன. அவை அவற்றின் வழியாக பருவப்பெயர்ச்சி மழையைக் கொண்டு செல்கின்றன; ஆனால் இந்த உயரத்தில் காற்று பொதுவாக வறண்டு இருக்கும். கீழே உள்ள மலைகளில் ஈரப்பதத்தை கொண்டிருக்கும். இந்த பகுதிகளில், சில நாட்கள் நீடிக்கும் காலநிலை மாற்றம் பயிர் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தலாம் – இலங்கையின் மற்ற இடங்களைப் போன்று இங்கும் தேயிலை ஆண்டு முழுவதும் பறிக்கப்படுவதால், எளிதில் இப் பிரதேசத்தை இனங்கண்டு கொள்ளலாம். தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழையின் காலம் – ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான கிழக்கு ‘தரமான பருவத்தில்’ / ‘quality season’ இதன் விளைவு மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருக்கும்.



