பல தசாப்தங்களாக, சிங்க சின்னம் (Lion Logo) தரம் மற்றும் உண்மையான சிலோன் தேயிலையின் (Ceylon Tea) அடையாளமாக அமைந்துள்ளது.
இச் சின்னமானது இலங்கை தேயிலை சபைக்கு சொந்தமானதாகும் என்பதுடன், உலகளாவிய ரீதியாக வர்த்தக முத்திரை கொண்டுள்ளது. உங்கள் தேயிலை பக்கற்றில் உள்ள சிங்க சின்னம் இலங்கையில் உற்பத்தியாக்கப்பட்ட 100% தூய சிலோன் தேயிலைக்கான உத்தரவாதமாகும். நீங்கள் வாங்குவது சிலோன் தேயிலை (Ceylon Tea) என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள சிங்க சின்னம் உள்ளதா (Lion Logo) என்பதைக் பார்க்கவும்.
சிங்க சின்னத்தை (Lion Logo) பதிவு செய்வதற்கான நடைமுறை
சிங்க சின்னத்தைப் பயன்படுத்த விரும்பும் எவரும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றல் வேண்டும்.
- சிங்க சின்னத்தின் (Lion Logo) உரிமையைப் பெறுவதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் வழிகாட்டுதல்களை தேயிலை சுவைத்தல் பிரிவிலிருந்து (Tea Tasting Unit) பெற்றுக்கொள்ள வேண்டும்.
- வழிகாட்டுதல்களின்படி, விண்ணப்பப்படிவம் முறையாகப் பூர்த்தி செய்யப்பட்டு சிங்க சின்னத்தின் (Lion Logo) பொதிகளுடன், இலங்கை தேயிலை சபையின் தேயிலை சுவைத்தல் பிரிவுக்கு அனுப்பப்படல் வேண்டும்.
- இவ்வாறு அனுப்பப்பட்ட மாதிரிப் பொதிகள் மதிப்பீடு செய்யப்பட்ட பிறகு, விண்ணப்பதாரருக்கு 3 வேலை நாட்களுக்குள் அவர்களின் விண்ணப்பப்படிவத்தின் நிலைமை பற்றி அறிவிக்கப்படும். விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டால், விண்ணப்பதாரர் ரூ. 5,000/- (ரூ. 5,000 N.B.T & VAT) பதிவுக் கட்டணத்தைச் செலுத்தி, ஒரு வருடத்திற்குச் செல்லுபடியாகும் சான்றிதழைப் பெற்றுக் கொள்ள முடியும்.
- ஒரே வர்த்தகப் பெயரன் கீழுள்ள மேலதிக பொதிகள் அல்லது ஏற்றுமதி செய்யும் சென்றடையும் இடங்களுக்கு, மேலதிக கட்டணம் எதுவும் அறவிடப்பட மாட்டாது. எவ்வாறாயினும், விண்ணப்பதாரர் கப்பலேற்ற முன்னர் மதிப்பீட்டிற்காக பொதிகள் மற்றும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
சிங்க சின்னத்தை (Lion Logo) பயன்படுத்துவதற்கான வழிகாட்டல் மற்றும் பதிவு செய்வதற்கான விண்ணப்பம்
சிங்க சின்னத்தை பயன்படுத்துவதற்கான வழிகாட்டல் மற்றும் விண்ணப்பம்



